மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Wednesday, December 1, 2010

தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை - இயக்குனர் அகத்தியன்


 தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90  களில்
முக்கியமாக  பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன் .இவரது
இயற்பெயர்கருணாநிதி என்பதாகும் .இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர் 
மாவட்டம் பேராவூரணி ஆகும் . இவரதுஆரம்பகால சினிமாக்கள்
 சரிவர ஓடவில்லை .இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த 
"மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991ஆண்டு
வெளிவந்தது .வந்த வேகத்தில் படம்பெட்டிக்குள் சுருண்டுவிட்டது .
1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த"மதுமதி'வெளிவந்தது.
இந்தப்படத்தில்  இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார் .
இந்தப்படமும்சுமாராகத்தான்ஓடியது.மூன்றுஆண்டுகள் இடைவெளிக்குபின்னர்1996இல்சிவசக்தி  பாண்டியன் தயாரிப்பில் 
 அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த"வான்மதி"படத்தை இயக்கினார் .
இந்தப்படம் ஓரளவிற்கு பெயர் வாங்கி கொடுத்தது.தேவா இசையில்
இந்தப்படத்தின்பாடல்கள் ஹிட்டாகின. அதே1996ஆண்டுவெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரைஉலகத்தை  இவர்பக்கம்
திரும்பிப்பார்க்க வைத்தது.படம்மிகப்பெரிய வெற்றியை 
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காகஅகத்தியனுக்கு சிறந்தஇயக்கம்  
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டுதேசிய விருதுகள் கிடைத்தன .
அகத்தியனுக்குமட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் 
சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக 
அமைந்தது என்றே சொல்லலாம் .இந்தப்படம்தமிழ்சினிமாவின்
 டிரென்ட் செட்டராக அமைந்தது .  பின்னர் இதே ஆண்டில் 
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை "படம் மூலம்மீண்டும் தான் 
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் .
இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது .நடிகர் கார்த்திக்கும் 
இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.இந்தப்படத்தில்
கார்த்திக்கின்கதாபாத்திரம்மிகஅருமையாகஅமைக்கப்பட்டிருக்கும்.
கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்சுவலட்சுமிஆகியோர் மிகச்சிறப்பாக
நடித்திருப்பார்கள்.1997 இல்வெளிவந்த"விடுகதை "தோல்வி படமாக
அமைந்தது .ஐம்பது வயது பிரகாஷ்ராஜ் இருபது வயது நீனாவை 
காதலிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
1998 இல்பிரசாந்த்இஷாகோபிகர் நடிப்பில்வெளிவந்த"காதல் கவிதை" நல்ல  பெயர்வாங்கிதந்தது.இளையராஜாஇசையில்இந்தப்படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு 
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல்"காதல் சாம்ராஜ்யம்" என்ற படம்
மூலம் தமிழுக்கு வந்தார் . இந்தப்படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.பின்னர் 2004  இல் ஜெய்ஆகாஷை  வைத்து"ராமகிருஷ்ணா"
2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.
இரண்டுமே சரியாக போகவில்லை.அகத்தியன் கடைசியாக எடுத்த படம் விக்ராந்த்,பாரதி  நடிப்பில் வெளிவந்த " நெஞ்சத்தைகிள்ளாதே"
இந்தப்படமும் இவருக்கு வெற்றியைத்தரவில்லை.அதன் பின்னர் அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை .சரவணன் நடித்த"சந்தோசம் " படத்தின்
 திரைக்கதை இவர் எழுதியதே. சிலபடங்களில்பாடல்களும் எழுதிஉள்ளார் .
இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி சென்னை 28 , கற்றது களவு, அதே நேரம் அதேஇடம்,அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு "சுல்தான் திவாரியார்
அனிமேஷன்  படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இவரது
இன்னொருமகளானசௌம்யாதருண்கோபிஜோடியாக "ஞானி"
என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இன்னொரு மகளான  மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின் கணவர்
திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை"படத்தின் இயக்குனர் ஆவார்.அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை படத்தில் ஒரு  காட்சியில் தோன்றினார் .
 மீண்டும் இவரிடமிருந்து ஒரு நல்லப்படத்தை  விரைவில் எதிர்பார்ப்போம் .

மற்ற இயக்குனர்களின் கதைகள் வரும் பதிவுகளில் .

நன்றி
ஜி.ராஜ்மோகன்






2 comments:

அருண்மொழிவர்மன் said...

"காதல் சாம்ராஜ்யம்" என்ற படம்
மூலம் தமிழுக்கு வந்தார் . இந்தப்படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை//

இல்லை இந்தப் படம் வெளிவரவேயில்லை. இத்தனைக்கும் யுவன் இசையில் பாடல்கள் பிரபலமாகி இருந்தன

Unknown said...

nice info!