மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
Tuesday, October 12, 2010


கவிதைகள் ( கவிஞர்கள் மன்னிக்கவும் )

பசி
சோறு கொண்டு வாரேன்னு
சொல்லிவிட்டு போனவளே
போயி ரொம்ப நேரமாச்சு
இன்னும் ஒன்ன காணலியே
வயிறு பசிகிதும்மா
வந்திடு நீ சீக்கிரமா
குடிச்சிபுட்டு எங்கயாச்சும்
குப்புற விழுந்து கெடக்கும்
குடிகார அப்பாவ
உங்கண்ணும் பார்த்துடுச்சோ
என் நெனப்பும் மறந்துடுச்சோ
வயிறு பசிகிதும்மா
வந்திடு நீ சீக்கிரமா !.

முங்கு நீச்சல்
காதல் கடலில்
விழுந்து விட்டேன் என்றேன்
அறிவு கேட்டது
நீந்தப்போகிறாயா அல்லது
மூழ்கப்போகிறாயா?
மனம் சொன்னது
நீந்திகொண்டே மூழ்கப்போகிறேன்
மூழ்கிகொண்டே நீந்தப்போகிறேன் !.

தன்னம்பிக்கை
நீ யாரையோ தான்
பார்க்கிறாய்
ஆனால் என்னைத்தான்
பார்க்கிறாய் என
நான் நினைத்துக்கொள்வதில்
தெரிகிறது என் தன்னம்பிக்கை!