மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
படித்ததில் பிடித்தது -எரியும் பனிக்காடு - "THE RED TEA" நாவல்

படித்ததில் பிடித்தது

எரியும் பனிக்காடு - "THE RED TEA" நாவல்

இது வரை நான் படித்த நாவல்களில் மிகச்சிறந்த ஒன்றாக எரியும் பனிக்காடு நாவலை சொல்லலாம் .இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தவர் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் அவர்கள். ஆங்கிலத்தில் 'THE RED TEA' என்ற இந்த நாவலை எழுதியவர் திரு . பி. ஹச்.டேனியல் அவர்கள். தமிழில் இதை திரு. முருகன் அவர்கள் அழகாக மொழி பெயர்த்துள்ளார். இந்த நாவலை படிக்கும் பொழுது ஒரு மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிறோம் என்ற எண்ணம் எழவேயில்லை. மிக அருமையான நடையில் தேர்ந்த மொழியில் மொழிபெயர்த்துள்ளார். திரு. டேனியல் அவர்கள் வால்பாறையில் சுகாதார அதிகாரியாக வேலை செய்த போது நடந்த நிகழ்வினை இந்த நாவலின் வழியே சொல்லியிருகிறார்.ஆங்கில ஆட்சியின் போது நடந்த கொடுமைகளை துல்லியமாக எழுதியிருக்கிறார்.நாவலை படிக்கும் பொழுது ஏற்படுகின்ற அனுபவம் அலாதியானது. ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறெல்லாம் அன்று அடிமை படுத்தபட்டார்கள் என்று கதாபாத்திரங்களின் வழியே நம் கண் முன்னே நடமாட விட்டிருக்கிறார். கதையின் நாயகன் கிராமத்தில் விவசாயம் பொய்த்து போனதால் பிழைக்க வேறு வழியின்றி வால்பாறை டீ எஸ்டேட்க்கு ஏஜென்டின் பொய்யான பேச்சை நம்பி வேலைக்கு செல்கிறான் . அங்கு அவன் படும் துயரங்களும் , இன்னல்களும் சொல்லில் அடங்காதவை . இப்படியும் கூட நடந்திருக்குமா என்று கேட்கும் அளவிற்கு எண்ணிலடங்கா துயரத்திற்கு ஆளாகிறான் நாயகன். நாவலின் வழியே ஆங்கில ஆட்சியின் போது துரைமார்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களுக்கு அடிவருடும் சில இந்திய துரோகிகளையும் படம் பிடித்து காட்டியுள்ளார்.நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது.