திருச்சியில் களம் இலக்கிய அமைப்பினர் சார்பில் 11 /11 /10 வியாழன் அன்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எஸ்.ரா அவர்கள் "கதைக்குள் வராதவர்கள்" என்ற தலைப்பில் சுமார் எண்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். அருமையான உரை. கண்டிப்பாக நம் சம காலத்து எழுத்தாளர்களில் எஸ். ரா நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.நாம் இந்த வணிக உலகில் எவற்றைஎல்லாம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஒட்டியே அவரது உரை இருந்தது .அலாவுதீன் கில்ஜியைப்பற்றி ,மாலிக் கபூரைப்பற்றி ,ஹிட்லரைப்பற்றி,களப்பிரர்கள் காலம் பற்றி
நமக்குதெரியாதப்பல விசயங்களைப்பற்றி விரிவாகப்பேசினார் .இது போன்ற இலக்கிய கூட்டங்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவு தர வேண்டும் .அரசியல் பொதுகூட்டங்களுக்கு .நமது பிரிக்கப்படாத தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றி எஸ். ரா பேசியதை இன்றைய அரசியல்வாதிகள் கேட்டிருக்க வேண்டும்.
அவர் பற்றி எஸ். சொன்ன சம்பவம் ஒன்று கேட்டால் இப்படியும் கூட ஒரு முதல்வர் தமிழ்நாட்டில் இருந்தாரா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.
ஒரு சமயம் ராமசாமி ரெட்டியார்.குற்றலாத்திற்கு காரில் டிரைவருடன் சென்றிருக்கிறார். திரும்பி வரும்பொழுது டிரைவர் டிக்கியில் ஒரு பலாப்பழத்தை தூக்கிப்போட்டு கொண்டு வந்துவிடுகிறார் .சென்னை வந்து சேர்ந்தவுடன் டிரைவர் அந்த பலாப்பழத்தை உரித்து தின்று கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ராமசாமி ரெட்டியார் இந்த பலாப்பழம் உனக்கு எப்படி கிடைத்தது என்று
டிரைவரிடம் கேட்கிறார் அதற்கு டிரைவர் குற்றாலத்தில் அவர்கள் தங்கியிருந்த தோட்டத்தில் பறித்ததாக கூறுகிறார் . இதைக்கேட்ட முதல்வருக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த பலாபழத்தின் விலை என்ன இருக்கும் என்று கேட்கிறார் அதற்கு டிரைவர் மூன்று ரூபாய் இருக்கும் என்கிறார் . முதல்வர் இந்த பழத்தை உடனே குற்றாலத்திற்கு எடுத்துச்சென்று அந்த தோட்டக்காரனிடமே கொடுத்து விட்டு வரும்படி கூறுகிறார். இதைக்கேட்ட டிரைவர் 'அய்யா ,இந்த பழத்தின் விலையே மூன்று ரூபாய் தான் ஆனால் இதை திருப்பிக்கொடுக்க போய் வர ஆறு ரூபாய் செலவு ஆகும் என்கிறான். அதற்கு முதல்வர் ,"அந்த தோட்டக்காரன் என்ன நினைப்பான் முதலமைச்சர் டிரைவரே இப்படி திருடுகிறானே அப்ப அந்த முதலமைச்சர் எவ்வளவு திருடுவான்னு நினைக்க மாட்டான "என்கிறார் .டிரைவருக்கு தன்னுடைய தவறு புரிகிறது .மேலும் முதல்வர் அந்த ஆறு ரூபாயை தான் தருவதாக சொல்கிறார் .டிரைவரும் பழத்தை குற்றாலத்தில் சேர்த்து விட்டு திரும்பி வருகிறான்.இப்போது முதல்வர் சொல்கிறார்,' அந்த தோட்டக்காரன் இப்ப என்னைப்பற்றி என்ன நினைப்பான் தெரியுமா ?வெறும் மூன்று ருபாய் பலாப்பழத்தைக்கூட இப்படி பாதுகாக்கிறாரே அப்ப இந்த நாட்டை எப்படி பாதுகாப்பார் அப்படின்னு நினைக்க மாட்டனா என்கிறார்.டிரைவரும் ஒப்புகொள்கிறார். மேலும் முதல்வர் அப்ப அந்த செலவு ஆறு ரூபாயை யார் தருவது என்று கேட்கிறார் அதற்கு டிரைவர் என்ன அய்யா நீங்க தானே தரேன்னு சொன்னிங்க என்று கூற "ஏன்யா நீ செஞ்ச தப்புக்கு நான் கொடுக்கணும் அதனால இந்த மாசத்தில் இருந்து மாசம் ஒரு ரூபாயை உன்னுடைய சம்பளத்திலிருந்து கொடுத்து விடு"என்கிறார். இப்படிப்பட்ட முதலமைச்சர் எல்லாம் கூட தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது .இந்த சம்பவத்தை பார்க்கும் போது
இப்போதுள்ள முதல்வர்களைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இது போன்ற பல விசயங்களைப்பற்றி எஸ். ரா அவர்கள் பேசினார். கூட்டத்தினர் யாரும் கூட்டம் முடியும் வரை நகலவில்லை. இதைப்போல இலக்கிய கூட்டங்கள் ஊர்தோறும் நடக்க வேண்டும். இதை சிறப்புற செய்த களம் அமைப்பை சேர்ந்த அனைவருக்கும் நன்றிகள் .
No comments:
Post a Comment